தமிழகம் சினிமா

சிக்கன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா பாண்டி! வதந்திக்கு பின்னால் மறைந்திருந்த அதிர்ச்சிஉண்மை!

Summary:

rumor spread as eating chicken make corono virus

சீனாவில் தோன்றிய உயிரை குடிக்கக்கூடிய கொடூர கொரோனா  வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பிய வதந்தியால் சிக்கன் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த பாண்டி என்பவர் சில தினங்களுக்கு முன்பு, சிக்கன் கடை ஒன்றில், சிக்கன் வாங்கி சமைத்து சாப்பிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் பரவியது. மேலும் சிக்கன் சாப்பிட்டதால்தான் கொரோனா  வைரஸ் பாதித்ததாக பரவிவந்த வாட்ஸப் செய்தியால் அப்பகுதியில் சிக்கன் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

 இந்நிலையில் அப்பகுதியில் கறி கடை வைத்திருக்கும் பக்ருதீன் என்பவர் இது குறித்து தனது நண்பர்களிடம் விசாரித்த நிலையில் இத்தகைய வதந்திக்கு சக்திவேல் என்ற 17 வயது சிறுவன்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. சக்திவேல் பக்ருதீன் கடையில் அடிக்கடி சிக்கன் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடனுக்கு சிக்கன் கேட்ட நிலையில் பக்ருதீன் கொடுக்கவில்லை.இந்நிலையில் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சக்திவேல் இவ்வாறு வதந்தியை பரப்பி உள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பக்ருதீன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவன் சக்திவேலை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். 


Advertisement