நோ செல்போன்.. நயன்- விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு விதிக்கப்பட்ட ஸ்ட்ரிக்ட் கட்டுப்பாடுகள்!!
நோ செல்போன்.. நயன்- விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு விதிக்கப்பட்ட ஸ்ட்ரிக்ட் கட்டுப்பாடுகள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பிறகு இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் வரும் ஜூலை 9-ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவிற்கு 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமண விழா உரிமை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் திருமணத்திற்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.