ப்பா என்னா ஸ்டைலு! அடையாளமே தெரியாமல் வேற லெவலில் மாறிய கண்ணம்மா! புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்!!

ப்பா என்னா ஸ்டைலு! அடையாளமே தெரியாமல் வேற லெவலில் மாறிய கண்ணம்மா! புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்!!


roshni-haripriyan-latest-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக சென்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.

இவரது எதார்த்தமான நடிப்பால் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில் திடீரென சில காலங்களுக்கு முன்பு ரோஷினி, பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ரோஷினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கண்ணைக் கவரும் சிவப்பு உடையில் செம ஸ்டைலாக அடையாளமே தெரியாத கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.