சினிமா

அட.. இது தெரியுமா? தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை! எந்த படத்தில் பார்த்தீர்களா!!

Summary:

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்று தல அஜித்தின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக வெளியாகவில்லை. இந்தநிலையில் அஜித் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது 1994 ஆம் ஆண்டு ஜானகி செளந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இந்த திரைப்படத்தில் தல தளபதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சன் டிவியில்  ரோஜா தொடரில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரி நடித்துள்ளார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.


Advertisement