
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளன. அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முன்னணியில் வரும் தொடர் ரோஜா. இந்த தொடருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்த தொடரில் ஹீரோயினாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதை பெருமளவில் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி.
இவர் 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நா சாமி ரங்கா, ஹைபர், நேனே ராஜு நேனே மந்திரி என தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிரியங்கா தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்த தொடர் ரோஜாதான். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவார். இந்த நிலையில் பிரியங்கா நல்காரி தற்போது தனது அம்மாவுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Advertisement
Advertisement