சினிமா

கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா செய்த செயல்..!

Summary:

Roja did special prayer for his home about corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இதிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்று நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காத்திட பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் வெளியே எங்கும் செல்லமுடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் கடுமையாக பின்பற்றினால் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீளமுடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தியுள்ளார்.

 


Advertisement