"என்னை ஏமாற்றி தான் இந்த வெப் தொடரில் நடிக்க வைத்தார்கள்" மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல தொகுப்பாளர் ஆர் ஜே விஜய்..

"என்னை ஏமாற்றி தான் இந்த வெப் தொடரில் நடிக்க வைத்தார்கள்" மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல தொகுப்பாளர் ஆர் ஜே விஜய்..



Rj Vijay open up about web series director

கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், தொகுப்பாளராகவும் வலம் வருபவர் ஆர் ஜே விஜய். இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுத்து வழங்கி பிரபலமான ஆர்ஜே வாக வலம் வருகிறார்.

RjVijay

மேலும் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் ஆர் ஜே விஜய், தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியுள்ளார். தற்போது 'வேற மாதிரி ஆபீஸ்' என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த வெப் தொடரின் அறிமுக விழாவில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் மேடையில் ஆர் ஜே விஜய் பேசிய போது, "இந்த வெப் சீரியஸில் முக்கியமான கதாபாத்திரம் நீங்கள் தான் பண்ணுகிறீர்கள். உங்களை வைத்துதான் கதை அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று கூறியிருந்தார்கள்.

RjVijay

இதில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்தது எல்லாரிடமும் இதையேதான் சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஏமாற்றி என்னை நடிக்க வைத்துவிட்டார்கள்" என்று மேடையில் கிண்டலாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.