"ரித்து வர்மாவின் ஹாட் அண்ட் க்யூட் போட்டோஷூட்" வைரலாகும் புகைப்படங்கள்.!
2013ம் ஆண்டு "பாட்ஷா" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் ரித்து வர்மா. மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், 2017ஆம் ஆண்டு தமிழில் "வேலையில்லா பட்டதாரி 2" படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
அதன் பின், "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தில் கதாநாயகியாக களம் இறங்கினார். தொடர்ந்து புத்தம் புது காலை, கனம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இவரது நடிப்பில் "துருவ நட்சத்திரம்" திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் மாடர்ன் லவ் சென்னை ஆண்டாலஜியில் இவர் நடித்த "காதல் என்பது கண்ணுல, ஹார்ட்டுல இருக்கிற எமோஜி" குறும்படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ரித்து வர்மா, தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில், கியூட் மற்றும் ஹாட்டானா போஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.