சினிமா

இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

Rithika singh come back to boxing

இறுதி சுற்று என்ற ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்த இவர் அருண் விஜய்யுடன் பாக்ஸர் படத்திலும், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வணங்கா முடி படத்திலும் நடித்துவருகிறார். மேலும் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சினிமாவில் ஓவர் பிஸியாகிவிட்ட ரித்திகா சிங் பாக்சிங்கில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் சினிமாவை விட தனக்கு பாக்சிங்கித்தான் முக்கியம் என முடிவெடுத்துள்ளாராம் ரித்திகா சிங். விரைவில் சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு பாக்சிங்கில் தீவிரமாக இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறுகிய காலத்தில் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற ரித்திகாவின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Advertisement