சினிமா

நடிகை ரித்திகா சிங்கின் கல்லூரி வயது புகைப்படம்! அப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

Summary:

Rithika singh college life photo

மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் நாயாகியாக நடித்தவர் ரித்விகா சிங்க். சிறந்த கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கியது இந்த திரைப்படம்.

படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் நாயகி ரித்விகா சிங்க் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இறுதி சுற்று படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்திருந்த இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீரர்தான்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரித்விகா. கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் செல்வா இயக்கும் “வணங்காமுடி ” என்ற படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி படிக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரித்விகா சிங்க்.


Advertisement