சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..! வெளியான பரபரப்பு தகவல் இதோ..!

சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..! வெளியான பரபரப்பு தகவல் இதோ..!


Red card for surya and jodhika movie

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடித்துள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிட, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படம் ஏப்ரல் மாதம் இறுதியில் திரைக்கு வெளிவருவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.

இதனால் பொன்மகள் வந்தால் படத்தை நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னணி நிறுவனம் ஓன்று இந்த படத்தை 9 கோடிக்கு வங்கியுள்ளதாகவும், இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவின் இந்த முடிவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருப்பதாகவும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

மேலும், தங்களுடைய கோரிக்கை ஏற்காமல் பொன்மகள் படம் ஆன்லைனில் வெளியானால்,  இனி சூர்யா தயாரிக்கும் படங்களையோ அவரை சார்ந்தவர்கள் தயாரிக்கும் படங்களையோ திரையரங்குகளில் திரையிட மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இய்குனார் சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரை போற்று திரைப்படம் சூர்யா தயாரிப்பில் உருவாகிவரும் நிலையில், தற்போது அந்த படம் வெளியாவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.