சினிமா

மெர்சல் சாதனையை ஈசியாக முறியடித்த 2.0 டீசர்...!

Summary:

record-break-2.0-teaser

மெர்சல் படம் இளையதளபதி நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சென்ற வருடம் வெளிவந்த மிகவும் பிரமாண்டமாக மெகா ஹிட் அடித்த படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது அனைவர்க்கும் தெரிந்ததே.  

இந்த படம் சுமார் ரூ.250 கோடி வரை வசூல் செய்தது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த படத்தின் டீசர் ஒரே நாளில் 10 மில்லியனுக்கும் மேல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 2.0 இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளிவந்தது 2.0 டீசர் ஒரே நாளில் 24மில்லியன் மேல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் சூப்பர் ஸ்டார் படம் 2.0 டீசர் இளையதளபதி மெர்சல் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது , மேலும், மெர்சல் தமிழ் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement