reason-behinds-vijay-fans
நம்ம இளையதளபதி விஜய்க்கு நம் தமிழ்நாட்டை தாண்டியும் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவருக்கென தனியாக விஜய் ரசிகர்கள் மற்றம் கேரளாவில் அங்குமிங்கும் இருக்கிறது. அடுத்த மாநிலமாக இருந்தாலும் விஜய் படம் என்றாலே அனைவரும் ஒன்றாகி விடுகிறார்கள். அங்கும் இளையதளபதி விஜய் படங்கள் அதிகமாக வசூல் செய்து வருகிறது.
இதற்க்கு காரணம் என்ன என்று பிரபல மலையாள நடிகர் லால் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
"விஜய் படம் என்றாலே எல்லாம் மீட்டர் போட்டு டான்ஸ், சண்டை என எல்லாமே சரியான அளவோடு தான் இருக்கும் மற்றும் எதோ ஒரு விதமாக ஈர்க்கும் விஷயம் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளார். மேலும் சும்மா எந்தவொரு படமும் வெற்றி ஆகாது அதன் பின்னால் கடின உழைப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ” மலையாள படங்கள் என்றால் விருது கிடைக்கும், ஆனால் தமிழ் போல மசாலா கலந்து கொடுத்தால் தான் அதிக ரசிகர்கள் பார்ப்பார்கள். அதனால் தான் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் ” என லால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள நடிகர் லால் சீமராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement