சினிமா

ஹாலிவுட்ல தான் அதை சூப்பரா செய்றாங்க, இந்தியாவுல அப்டி இல்லை!. ஓப்பனாக பேசிய ராதிகா ஆப்தே!.

Summary:

ஹாலிவுட் சினிமாத்துறை தான் அதை சூப்பரா செய்றாங்க, இந்தியாவுல அப்டி இல்லை!. ஓப்பனாக பேசிய ராதிகா ஆப்தே!.


தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி, வெற்றிச்செல்வன் போன்ற  படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது இவர் இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருகிறார். 

இவர் கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக திகழ்ந்துவருகிறார். சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் கவர்ச்சி புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் கூறுகையில் நான் இப்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறேன். ஹாலிவுட்டில் இருப்பவர்களின் தொழில் நடவடிக்கைகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது. நான் ஒரு முறைகூட படத்தில் நடித்ததற்கு சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்டதே இல்லை.

ஆனால் சம்பள தேதிக்கு முன்னதாகவே அதை எனக்கு தந்து விடுகிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் முக்கியம். அதை குறிப்பிட்ட நேரத்தில் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அனைவரிடமும் இருக்கும். ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு முன்பே அதை கொடுத்து விடுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் நான் நடித்த படங்கள் வெளியான பிறகு கூட சம்பளம் தருவது இல்லை. சில படங்களின் சம்பளத்துக்காக 2 ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது என கூறினார்.


Advertisement