ராட்சசன் படத்தின் இசைவெளியீடு தேதி அறிவிப்பு...!

ratchasan-songs-release-sep25


ratchasan-songs-release-sep25

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். இவர் அவருக்கென கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் அதனை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவும் தெரிந்தவர். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம் தான் "ராட்சசன்". இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் திரில்லர் கலந்த கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை பாராட்டும் விதமாகவும் ரசிகர்கள் இந்த ட்ரைலர் லிங்க்-யை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள். மேலும் அவரவர் சமூக வலைதள த்விட்டேர் பக்கத்திலும் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கினார்கள். 

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதியினை இந்த படத்தின் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நாளை செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் ட்ரைலர் போல பாடல்களும் ரசிகர்களை கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.