சினிமா

அந்தப்படத்தில் நடித்ததால் ராஷ்மிகாவிற்கு இப்படியொரு சோதனையா? வேதனையுடன் அவரே கூறியுள்ளதை பார்த்தீர்களா!

Summary:

rashmika tweet about movie experience

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும்  பெருமளவில் பிரபலமானார். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

இன்னலையில் சமீபத்தில் தனது சினிமா அனுபவம் குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்  சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் எனக்கு சினிமாவை பற்றியும், நடிப்பு குறித்தும் ஒன்றும் தெரியாது. இந்நிலையில் சமீபத்தில் நான் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன். இந்த படத்தை பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தினரெல்லாம் என்னை ஒருமாதிரி பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் என்னை பற்றி கேவலமாகவும் பேசினார்கள். 
என்னால் இது வெறும் நடிப்பு என அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் என்னுடைய நண்பர்கள், தோழிகளும் எல்லாரும் நான் சினிமாவுக்கு வந்ததால் என்னுடன் நட்பை முறித்துக் கொண்டார்கள். எனக்கு இது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது கூறியுள்ளார்.


Advertisement