
rashmika mandanna salary increased
நடிகர் விஜயதேவர கொண்டவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து rashmika நடிகர் விஜயுடன் இணைந்து, டியர் காம்ப்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவில் விரைவாக வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நடிகை ராஷ்மிகா தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்தநிலையில் டியர் காம்ப்ரேட் படத்தின் விளம்பரத்திற்காக ராஷ்மிகா விஜயதேவரகொண்டாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்மிகாவிடம் 'நீங்கள் சம்பளத்தை மிக அதிகமாக உயர்த்திவிட்டீர்களாமே? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ராஷ்மிகா, நான் மூன்று வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறேன், என்னுடைய வளர்ச்சி எனது சம்பளத்தையும் சேர்த்து தான், ஏன் நீங்கள் சம்பள உயர்வு கேட்கமாட்டீர்களா என கேட்டுள்ளார்.
நடிகை ரஷ்மிகா 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிவந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தான் நடிக்கும் படத்திற்கு 1 கோடி வரையில் சம்பளம் கேட்டு வருகிறார். இதனை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement