சினிமா

இந்த பிரபல தமிழ்நடிகரை திருமணம் செய்துகொள்ள ஆசையா? நடிகை ராஷ்மிகா ஓபன்டாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

rashmika mandana like to marry vijay

 நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில்  நடிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா  சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரிடம் நட்பு, காதல், திருமணத்தை குறிக்கும் மூன்று நிற ரோஜாக்களை கொடுத்து இதனை யாருக்கு வழங்குவீர்கள் என்று கேட்டுள்ளனர். 

உடனே  ராஷ்மிகா நட்பை குறிக்கும் ரோஜா பூவை விஜய் தேவரகொண்டாவிற்கும்,தனது காதலை குறிக்கும் ரோஜாவை விஜய் சேதுபதிக்கும் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை குறிக்கும் ரோஜாவை தளபதி விஜய்க்கு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


  


Advertisement