சினிமா

இது என்ன புது பேஷன் டிரெஸ்ஸா? ரஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Summary:

Rashmika latest photo viral

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.  அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும்  பெருமளவில் பிரபலமானார். 

மேலும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

 இந்நிலையில் சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை பெற நடிகைகள் பலரும் தீவினை பிஸியாக இருக்கும் நிலையில் மிகவும் வித்யாசமாக சிவப்பு தோல் மற்றும் பேண்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இப்போ இதுதான் பேஷனா என கேட்டு வருகின்றனர். 


Advertisement