சினிமா

அடேங்கப்பா.. வேற லெவல்தான்! தென்னிந்திய நடிகைகளில் முதலிடம் பிடித்த நடிகை ராஷ்மிகா!!

Summary:

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரா

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் அவர் தெலுங்கு மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

அவர் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் நடிகை ராஷ்மிகாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பாலோயர்ஸ்களை பெற்று தென்னிந்திய நடிகைகளில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்ற முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.


Advertisement