சினிமா

அடஅட.. எதை பார்ப்பது, அம்புட்டும் அழகு! ஒத்த புகைப்படத்தால் ரசிகர்களை சொக்கியிழுத்த ராஷ்மிகா!!

Summary:

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடி

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் இன்கேம் இன்கேம் பாடல் மூலம் ராஷ்மிகா அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெருமளவில் பிரபலமானார்.

இந்தநிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவிற்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவர் ஏராளமான ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது விதவிதமான முகபாவனைகளை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து லைக்ஸ்குகளை குவித்து வருகிறது.

 


Advertisement