அடேங்கப்பா.. அப்பவே என்னவொரு போஸ்! குட்டி ராஷ்மிகா எவ்ளோ கியூட்டா இருக்காங்க பார்த்தீர்களா!!

அடேங்கப்பா.. அப்பவே என்னவொரு போஸ்! குட்டி ராஷ்மிகா எவ்ளோ கியூட்டா இருக்காங்க பார்த்தீர்களா!!


rashmika childhood photo viral

கிரிக் பார்ட்டி என்ற கன்னட சினிமாவில் நடித்ததன் மூலம் திரையிலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில்  கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பல மொழி ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த அவருக்கு தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

 ராஷ்மிகா தமிழ் சினிமாவில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படத்தில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். சுல்தான் திரைப்படம் வெளியான பிறகு ராஷ்மிகாவிற்கு தமிழிலும் பெரும் ரசிகர்கள் உருவாகினர். ஏராளமான படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா செம கியூட்டாக போஸ் கொடுத்து சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, கொரோனா எப்போது போகும் என காத்திருக்கிறேன்  என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.