பிளாட்பாரத்தில் பாடி பிச்சை எடுத்த பெண், டிவி நிகழ்ச்சியால் பிரபலமானதும் இவ்வளவு தலைகனமா? வைரல் வீடியோ!

Ranu Mondal Misbehave with fan video goes viral


Ranu Mondal Misbehave with fan video goes viral

ஒருசிலருக்கு எப்போது, எப்படி அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே பிளாட்பாரத்தில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டல் என்ற பெண்னின் வீடியோ சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலானது.

இதனை அடுத்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஓன்று அவரை பேட்டி எடுத்ததோடு டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாடி மேலும் புகழ் பெற்றார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஸ்மையா என்பவர் இவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தார். தற்போது வரை அவர் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.

Mystery

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் இவருக்கு 50 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி கொடுத்ததாகக்கூட செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடை ஒன்றிற்கு சென்றிருந்த Ranu Mondal இடம்  ஒரு பெண் செலஃபீ எடுக்கவேண்டும் என வருகிறார். Ranu Mondal மற்றொரு புறம் திரும்பியிருந்ததால் அந்த பெண் அவரின் தோளில் தட்டி அவரை கூப்புடுகிறார்.

இதற்கு கோபமடைந்த Ranu Mondal தற்போது தான் ஒரு சினிமா ஸ்டார் ஆகிவிட்டேன. நீ எப்படி எனது தோளில் தட்டலாம் என கோபமடைந்து அந்த பெண்ணை திட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் நெட்டிசன்கள் அனைவரும் Ranu Mondalஐ கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.