சினிமா

பார்த்ததும் மிரளவைக்கும் புதிய அவதாரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ! முதன்முதலாக வெளிவந்த மிரட்டலான புகைப்படம் இதோ!

Summary:

Ramyakrishnan act as jayalalitha in queeen webseries

தனது சினிமாவின்  மூலம் தமிழக மக்களிடையே அறிமுகமாகி,  அரசியலில் பல தடைகளை சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக அவதாரமெடுத்து  தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி, லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் இயக்குனர் விஜய் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை தலைவி என்ற படமாக எடுத்து வருகிறார்.

 

அவரை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் அதனையே குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. ஆனால் அதில் ரம்யா கிருஷ்ணனின் முகம் காட்டப்படவில்லை. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில்  வெளிவந்து வைரலாகி வருகிறது. 

 

 


Advertisement