அட.. இனி சூப்பர்தான்! பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல இளம்நடிகை! இன்ப அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!!

அட.. இனி சூப்பர்தான்! பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பிரபல இளம் நடிகை! இன்ப அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!!


ramya-pandian-entry-in-bigboss-ultimate

டிஸ்னி பிளஸ் ஸ்டாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சண்டை, அன்பு, மோதல், சச்சரவு என எதற்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. 

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் இருவரும் வைல்ட்  கார்டு என்ட்ரியாக நுழைந்தனர்.

இந்நிலையில் அசத்தலான ப்ரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரைக் கண்டதும் போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பார்வையாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.