சினிமா

என்னது நடிகை ரம்யா நம்பீசன் புதிதாக இந்த தொழிலில் களமிறங்கவுள்ளாரா! வைரலாகும் ட்விட்டால், வாழ்த்தும் ரசிகர்கள்.

Summary:

Ramya nambison

1996ல் காத்தபுருசன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். அதனை தொடர்ந்து ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். அதனை அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றால் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். மேலும் தான் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.

மேலும் அதில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யுள்ளார். இவர் சினிமாவை தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement