சினிமா

வயசானாலும் அழகு சும்மா அள்ளுதே! நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்தைக் கண்டு சொக்கிப்போன ரசிகர்கள்!!

Summary:

வயசானாலும் அழகு சும்மா அள்ளுதே! ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்தைக் கண்டு சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் அவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மற்றும் பிரபாஸ் ஹீரோவாக நடித்த பாகுபலி படத்தில் நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் மக்களைப் பெருமளவில் கலந்து அனைவராலும் பாராட்டப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.

 ரம்யா கிருஷ்ணனுக்கு வயதானாலும் அழகு குறையாமல் இன்னும் இளமையாக, பொலிவுடனே காணப்படுகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.


Advertisement