சினிமா

நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட வினோத ஆசை! நம்ம சூப்பர் ஸ்டார் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! புகைப்படங்கள் இதோ!

Summary:

rajini weared bangles for pregnant lady

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து எவரும் எட்ட முடியாத இடத்தை பிடித்து சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த வயதிலும் அவரது ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பிற்கு எந்த குறைவும் இல்லை. மேலும் அவருக்கு இப்பொழுதும் தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ராகவா விக்னேஷ் என்ற ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது மனைவியை அழைத்துச் சென்று ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வைத்துள்ளார் மேலும் அதுமட்டுமின்றி தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு அவரது கையால் வளையல் அணிவித்து வளைகாப்பு விழாவையும் நடத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் அந்த கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு வளையல் அணிவித்து ஆசிர்வாதம் செய்துள்ளார். 

இந்நிலையில் ராகவா விக்னேஷ் அத்தகைய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நிறைமாத கர்ப்பிணியான என் மனைவியின் ஆசையை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய என் அன்புதலைவருக்கு சிரம் தாழ்த்த நன்றிகள்.கருவிலே தலைவரின் ரசிகனாய் இருக்கும் 3ஆம் தலைமுறை ரசிகனுக்கு தலைவரின் பொற்கரங்களால் வளைகாப்பு விழா என பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினி ரசிகர்ளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement