மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
ரஜினி, கமல் பட நடிகையா இவங்க.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் ரதி அக்னிஹோத்ரி. இவர் பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் அன்புக்கு நான் அடிமை, கழுகு, முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக "நிறம் மாறாத பூக்கள்" என்ற படத்தின் மூலம் பிரபலமான ரதி, கமலஹாசனுடன் "உல்லாசப்பறவைகள்" படத்திலும் நடித்துள்ளார். மேலம் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள இவர், சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே ரதி 1985ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தனுஜ் விர்வானி என்ற ஒரு மகன் உள்ள நிலையில், 2015ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில் தனது மகனுடன் வரும் ரதி அக்னிஹோத்ரி, தற்போது அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.