சினிமா

ரஜினியை பார்த்த ஆசையோடு சென்ற ரசிகருக்கு இப்படியொரு வேதனையா? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

rajini fan loss money in crowd

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒ‌ன்றில் கலந்து கொண்டுள்ளார். இத்தகவல் அறிந்ததும் பாலகணேஷ் ரஜினிகாந்தை நேரில் பார்க்க விரும்பியுள்ளார். பாலகணேஷ் தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்துவருகிறார். இவரிடம்  ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற‌னர். இந்நிலையில் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக தங்க நகைகளை அடமானம் வைத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திரட்டியுள்ளார். மேலும் ரஜினியை பார்க்கும் ஆர்வத்தில் அந்த பணத்தை அவர் தனது பாக்கெட்டில் வைத்தவாறே ரஜினியை காண சென்றுள்ளார்.

அங்கு நடிகர் ரஜினிகாந்த் விவிஐபி நுழைவு வாயில் அருகே வந்தபோது, ரசிகர்கள் பலரும் அவரை பார்ப்பதற்காகவும், அவர்களுடன் செல்பி எடுப்பதற்காகவும் இடித்துத்தள்ளிக்கொண்டு சென்றுள்ளனர். பாலகணேஷும் முண்டியடித்துக்கொண்டு முன்னாடி சென்றுள்ளார். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாலகணேஷ் வைத்திருந்த பணத்தை பிக்பாக்கெட் திருடர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் அதனை கவனிக்காத பாலகணேஷ் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து முடித்துவிட்டு, தனது பாக்கெட்டில் பார்த்தபோது  40 ஆயிரம் பணம் இல்லை.  பணம் திருடப்பட்டதை அறிந்த பாலகணேஷ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்

அதனை தொடர்ந்து பாலகணேஷ் நடந்தவற்றை கூறி, தனது பணத்தை மீட்டு தருமாறு கூறி வேதனையுடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement