நடிகர் கமலின் இந்த பட டைட்டிலை வைத்தது ரஜினியா! சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

நடிகர் கமலின் நடிப்பில் வெளிவந்த தெனாலி படத்தின் தலைப்பை ரஜினிதான் பரிந்துரை செய்தார் என இயக்குனர் கே.எஸ் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.


Rajini choose kamal movie name tenali

தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் தெனாலி. இப்படத்தில் ஹீரோவாக கமல் நடித்துள்ளார். இதில் கமல் இலங்கை தமிழ் பேசும் நபராக நடித்திருந்தார். 

 மேலும் அவருடன் ஜெயராம், ஜோதிகா, தேவயானி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரபலமான, முன்னணி இயக்குனரான K.S. ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்தநிலையில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Tenali

இந்த நிலையில் நேற்று ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்த K.S ரவிக்குமார், தெனாலி படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார். அப்பொழுது அவர் கமலின் படத்திற்காக தெனாலி என்ற டைட்டிலை நடிகர் ரஜினிதான் பரிந்துரை செய்தார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.