சினிமா

நடிகர் ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்! அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!

Summary:

நடிகர் ரஜினி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த சில காலங்களுக்கு  முன்பு மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் வேலைகளில் ஈடுபட இருப்பதால், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் முடித்துவிட்டு சென்னை வருவதாக இருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஜினி இல்லாமல் துவங்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு.. முழு விவரத்துடன்  இதோ.. - Cineulagam

இந்த நிலையில் நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனாலும் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உடல்நலத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். மேலும் ரஜினிக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர்ந்து சிகிச்சை பெறுவார். மேலும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் உடல்நலம் தேறி வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement