சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு குவியும் லட்சக்கணக்கான வாழ்த்துக்கள்! இது தான் காரணமா!

Summary:

Rajini

தமிழ் சினிமாவில் இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா ஏன் உலகம் முழுவதும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ரஜினி மற்றும் லதா அவர்களின் 39 வது திருமண நாளை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement