முழுசா சந்திரமுகியா மாறின வடிவேலு.. நடிகர் ராகவா லாரன்ஸ் பகிர்ந்த இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!! செம ட்ரெண்டிங்.!ragava-lawrence-shares-image-with-vadivelu-at-shooting

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. இதில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு, வினித் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. 

இதனையும் இயக்குனர் பி. வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். அவர்களுடன் வைகை புயல் வடிவேலு முக்கிய ரோலில் நடிக்கிறார். தற்போது சந்திரமுகி 2 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை கட்டி அணைத்தபடி இருக்கும் கலகலப்பான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், முழுசா சந்திரமுகியா மாறின வடிவேலு, இழுத்து அணைக்கும் ராகவா லாரன்ஸ் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.