சன் டீவியில் வருகிறது பிரமாண்ட சீரியலின் இரண்டாம் பாகம்! எந்த சீரியல்? எந்த நடிகை தெரியுமா?

சன் டீவியில் வருகிறது பிரமாண்ட சீரியலின் இரண்டாம் பாகம்! எந்த சீரியல்? எந்த நடிகை தெரியுமா?


Radhikas chithi 2 in sun tv coming soon

சன் தொலைக்காட்சி என்றாலே அனைவர்க்கும் நினைவில் வருவது சீரியல்கள்தான். இல்லத்தரசிகள் மட்டுமே டிவி சீரியல் பார்த்துவந்த காலம் போய் தற்போது அணைத்து தரப்பு மக்களும் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர்.

தற்போது ஒளிபரப்பாகிவரும் நாயகி, ரோஜா, ரன் போன்ற தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடரின் இரண்டாம் பாகம் சன் தொலைக்காட்சியில் விரைவில் வர உள்ளதாம்.

Sun tv

ஆம், ராதிகா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற சித்தி தொடரின் பாகம் 2 அதாவது சித்தி 2 விரைவில் வர இருப்பதாக ராதிகா கூறியுள்ளார். வாணி ராணி தொடருக்கு பிறகு ராதிகா நடித்த சந்திரலேகா தொடர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதனால், ராதிகாவுக்கு என ஒதுக்கப்பட்ட ப்ரைம் டைம் மற்ற சீரியல்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஒரு நல்ல கதையுடன் வருவேன் என கூறியிருந்த ராதிகா சித்தி 2 சீரியலில் தான் வருவேன் என்றும் கண்ணின் மணி என்ற பாடலும் வரும் என்று அறிவித்திருக்கிறார்.