சினிமா

இவ்வளவு தூரம் வருவேன் என நினைத்துகூட பார்க்கலை...குவிந்த வாழ்த்துக்கள்! நெகிழ்ச்சியுடன் நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு!

Summary:

Radhika tweet about her 42 year cinema travel

1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கிழக்கே போகும் ரயில். இத்திரைப்படத்தில் நடிகர் சுதாகருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். 

நடிகை, தயாரிப்பாளர் தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார். ஆகஸ்ட் 10 நேற்றுடன் ராதிகா சரத்குமார் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ராதிகா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு, என் சிறந்த முயற்சியைத் தந்தேன். தொடர்ந்து என் வேலையை வளர்த்தேன். அதுதான் எனக்கு இந்தப் பயணத்தைத் தந்துள்ளது. பலருக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை, துணிச்சலைத் தந்துள்ளது.எனக்கு அன்பையும், வலிமையையும் தந்துள்ளது. அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். 


Advertisement