சினிமா

சரியாக சொன்னாய்! வீடியோவை வெளியிட்டு வரூவின் தைரியத்தை பாராட்டிய நடிகை ராதிகா! ஆடிப்போன ரசிகர்கள்!

Summary:

Radhika post video about varalakshmi

பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமாரின் மகள் வரலெட்சுமி, போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து வில்லியாக புதிய அவதாரம் எடுத்து நடித்த சண்டகோழி 2, சர்கார் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளேன். நான் ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசு என தெரிந்த பின்பும் என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தவறான முறையில் என்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கேட்டனர். ஆனால் அப்படியொரு  வாய்ப்பு எனக்கு தேவையில்லை என நான் மறுத்துவிட்டேன். மேலும்  என்னிடம் பேசியவர்களின் போன் ரெகார்டிங் ஆதாரங்கள் தற்போதும் உள்ளது. மேலும் பெண்கள் ஒத்துக்கொண்டு எல்லாம் நடந்து முடிந்த பிறகு மீது  புகார் தெரிவிப்பது ஏற்கமுடியாதது. எனக்கு அப்படியொரு வாய்ப்பு தேவையில்லை என கூறவேண்டும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பேட்டியை நடிகை ராதிகாதனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து   வரலட்சுமியை பாராட்டியுள்ளார்.


Advertisement