சினிமா

சித்தி 2 சீரியல் நிறுத்தபடுகிறதா? தீயாய் பரவிவந்த தகவல்! ஒத்த வார்த்தையால் நச்சென பதிலளித்த நடிகை ராதிகா!

Summary:

சித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறது என தகவல்கள் பரவி வந்தநிலையில் நடிகை ராதிகா அது வதந்தி என கூறியுள்ளார்.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் சித்தி. இந்த தொடரில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர். 

சித்தி தொடர் ரசிகர்களிடையே பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சித்தி 2 என்ற பெயரில் தொடங்கி, நாளுக்கு நாள் சுவாரசியமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பல பிரபலங்களும் அவருடன் இணைந்து நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த சீரியலை விரைவில் நிறுத்த சன் தொலைக்காட்சி உத்தரவிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ராதிகா சரத்குமாரிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்ட நிலையில் அதற்கு ராதிகா அது வதந்தி என தெரிவித்துள்ளார். இதனால் சித்தி 2 ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement