சினிமா

நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு காரணம் கொரோனா தடுப்பூசிதானா?? உண்மையை உடைத்த சுகாதாரத்துறை செயலாளர்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் விவேக்கிற்கு இன்று திடீரென நெஞ்சுவலி மற்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் விவேக்கிற்கு இன்று திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதயத்துடிப்பு குறைவாக இருந்தநிலையில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயப்படாதீர்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரலாம். ஆனால் உயிரிழப்புகள் இருக்காது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி போட்டதுதான் என தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விவேக் தானாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தற்போது அவரது உடல்நிலை மோசமாகதான் உள்ளது. அவர் உடல்நிலை முன்னேறவே அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

விவேக் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் 100% எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மாரடைப்பு தவிர அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு எதிர்பாராத நிகழ்வு என கூறியுள்ளார்.


Advertisement