அம்மாடியோவ்.. 50 நாட்களில் இவ்வளவா! புஷ்பா படம் படைத்த சாதனை! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

அம்மாடியோவ்.. 50 நாட்களில் இவ்வளவா! புஷ்பா படம் படைத்த சாதனை! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


pushpa-movie-vasool-detail-viral-wu72rl

முன்னணி தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா. இப்படம் செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

புஷ்பா படத்தில் ஹீரோயினாக  ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில்  நடித்துள்ளனர். மேலும் சமந்தா ஊ சொல்றியா மாமா... என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள. இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் உருவானது.

Pushpa

மேலும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனையை குவித்து வருகிறது. அதாவது புஷ்பா படம் வெளிவந்து 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் படைத்த வசூல் சாதனை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது புஷ்பா படம் 50 நாட்களில் 
ரூ.365  கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.