இப்படி காட்டி இளைஞர்களை கெடுத்து காசு சம்பாதிக்கனுமா? புஷ்பா பட நடிகைகளை கடுமையாக விமர்சித்து திட்டிய பிரபலம்!! வைரல் வீடியோ இதோ.

இப்படி காட்டி இளைஞர்களை கெடுத்து காசு சம்பாதிக்கனுமா? புஷ்பா பட நடிகைகளை கடுமையாக விமர்சித்து திட்டிய பிரபலம்... வைரல் வீடியோ இதோ...


pushpa-movie-comments

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதை தொடர்பாக உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம்  புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.  இந்த படம் 2 பாகமாக வெளியிடப்படவுள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார். 

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார்.மேலும் இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுள்ளார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. மேலும் புஷ்பா படம் 50 நாட்களில் ரூ.365 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புஷ்பா படம்  வெளியாகி  50 நாட்களுக்கு மேலாக  ஆன  நிலையில் இப்படத்தை பற்றி தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான கரிகா பதி நரசிம்ம ராவ் புஷ்பா திரைப்படத்தில் நடித்த  அனைவர்  குறித்தும் குற்றம் சாட்டி பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், குற்றம் செய்யும் ரவுடியை நல்லவனாக சித்தரித்து நடித்திருப்பது இளைஞர்கள் சமுதாயத்தை கெடுக்கும் விதாமான அமைந்துள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா, சமந்தா எல்லைமீறிய ஆடைகளை அணிந்து ஆபாசமாக ஆடியது கொஞ்சம் கூட நன்றாகயில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இப்படி காட்டித்தான் சம்பாதிக்க வேண்டுமா என்றும் கேள்வியும் கேட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் படம் வெளியாகி 50 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் இப்போது கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ  அந்த  வீடியோ...