நான் தாலி கட்டும்போது இப்படிதான் இருப்பேன்! காதலியுடன் மாஸ் காட்டும் புகழ்! வைரலாகும் வீடியோ!!

நான் தாலி கட்டும்போது இப்படிதான் இருப்பேன்! காதலியுடன் மாஸ் காட்டும் புகழ்! வைரலாகும் வீடியோ!!



pugazh-with-her-lover-reels-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது கலாட்ட  நிறைந்த  காமெடியான பேச்சால் ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் புகழ். அதைத்தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

பின்னர் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு  வெள்ளிதிரையில் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் பிஸியாக  உள்ளார். புகழ்  பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அண்மையில் அவரே புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராமில் காதலியுடன் ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புகழின் காதலி, நான்லாம் தாலி கட்டும் போது என் புருஷன் எட்டிதான் கட்டணும், அப்படி நிமிந்து உக்காந்துட்டு இருப்பேன். ஆம்பளைங்களுக்கு வெக்கமா இருந்தா அவங்க குனிஞ்சிக்கட்டும் என சொல்ல, ஆமா பார்ட்னர் நீ நல்லா நிமிந்தே உக்காரு என் பொண்டாட்டி அப்படிதான் இருக்கனும் என்ற சிவகார்த்திகேயன் பட வசனத்தை பேசியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.