கொடுத்த வாக்கை காப்பாற்றாமல், தயாரிப்பாளரை ஏமாற்றிய நடிகர் அஜித் குமார்; பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் தல ரசிகர்கள்.!

கடந்த 2006ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலினி முகர்ஜி, ஜோதிகா, விடிவி கணேஷ், டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ், ஜானகி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
படம் நேற்று 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிகழ்வை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அன்றைய நாட்களில் வசூல், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாக கமலுக்கு வேட்டையாடு விளையாடு இருந்தது. கமலின் ராகவன் கதாபாத்திரம் இன்றளவும் பலருக்கும் பிடிக்கும். இந்நிலையில், படத்தின் இயக்குனர் மாணிக்கம் அஜித் குமாரின் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது, "நடிகர் அஜித் கும்மர் ஜென்டில்மேன் கிடையாது. அவர் தனது குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கு என்னிடம் வாங்கிய கடனை இன்று வரை திரும்பி தரவில்லை. எனக்கு ஒரு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என கூறினார். அதனையும் அவர் கண்டுகொள்ளவில்லை" என தெரிவித்தார்.