ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் வருங்கால கணவர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் வருங்கால கணவர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.


Priyanka husband photo

இன்று மக்கள் அனைவரும் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையில் உள்ள நடிகை, நடிகர்கள், சீரியலுக்கு ரசிகர்களாக மாறி விட்டனர். அந்த வகையில் மக்கள் அனைவராலும் ரசிக்கப்படும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இவர் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை கொண்டவர். ஆனால் அதில் சரியான வாய்ப்புகள் வராததால் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.

priyanka

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் அவரின் காதலரை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகர் ராகுலை காதலித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் எங்களுக்கு கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அதன் பிறகு எனக்கு, அவருக்கு நேரம் இல்லாமல் போனதால் திருமணம் செய்ய முடியவில்லை. இருவரும் பிஸியாக நடித்து வந்ததால் பேச கூட நேரம் இல்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டது.

priyanka

உடனே அவர் நடிப்பை விடுத்து வெளிநாட்டிற்கு சென்று தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனால் பலர் எங்களது திருமணம் நின்று விட்டதாக கூறினார்கள். அது உண்மையில்லை நாங்கள் இருவரும் இன்னும் பேசி கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய போகிறோம் என கூறியுள்ளார்.

priyanka