மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கிய பிரியங்கா! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!

மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கிய பிரியங்கா! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!



Priyanga going to host super singer show again

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. யார் எவ்வளவு கலாய்த்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஜாலியாக, கலகலப்பாக தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

அதனைத் தொடர்ந்து பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திறமையாக விளையாடினாலும் ஒருசில செயல்களால் அவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

priyanka

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் பிரியங்கா மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியங்கா பின்னணி பாடகி பிரியங்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.