சினிமா

வாவ்.. செம கியூட்! தொகுப்பாளினி பிரியங்கா சிறுவயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

வாவ்.. செம கியூட்! தொகுப்பாளினி பிரியங்கா சிறுவயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

அதிலும் மாகாபா ஆனந்துடன் இணைந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. பிரியங்கா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.  மேலும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவர் தற்போது சாமார்த்தியமாகவும், திறமையாகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் பிரியங்கா சிறுவயதில் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பிரியங்கா அப்பொழுதும் கொழுகொழுவென செம கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.


Advertisement