
மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்
மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இவர் இந்த திரைப்படத்தில் ஒற்றை புருவத்தை உயர்த்தி, கண் அடித்தது மூலம் உலகளவில் புகழ் பெற்றார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது.
மேலும் தற்போது தெலுங்கு சினிமாவில் காலடி பதித்துள்ள பிரியா வாரியார் நிதினுக்கு ஜோடியாக செக் என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியா வாரியர் அவ்வப்போது லைவ் சேட்டில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் அவர்கள் செய்யும் கமெண்டிற்கும் பதிலளிப்பார்.
இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், அவரைக் குறித்து எல்லை மீறி ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளார். இதனைக் கண்டு கொந்தளித்த அவர் அந்த நபரின் ஐடியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து, ஏன் நீ போலியான ஐடியில் இருந்து கமெண்ட் செய்கிறாய். உனக்கு தைரியம் இல்லையா? என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement