வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
வயதானபிறகு ப்ரியா பவனி ஷங்கர் இப்படித்தான் இருப்பாராம்! அவரே வெளியிட்ட புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம்முதல் காதல்வரை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவருக்காகவே இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம். சின்னத்திரையில் புகழின் உச்சத்திற்கு சென்ற ப்ரியா அடுத்ததாக வெள்ளித்திரை பக்கம் சென்றார்.
நடிகர் வைபவுடன் மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுத்த இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் SJ சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும்நிலையில் ப்ரியாவும் தான் வயதானபிறகு எப்படி இருப்பேன் என்ற புகைப்பட்டதை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
Finally #faceappchallenge pic.twitter.com/vjGCLuLeke
— Priya Bhavani Shankar (@PriyaBShankar_) July 18, 2019