என்னது.. பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவா இது! ஆள் அடையாளமே தெரியாம இப்போ எப்படியிருக்கார் பார்த்தீர்களா!poove unakaga actress sangeetha recent photo viral

தமிழ் சினிமாவில் தற்போது பல மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்சநட்சத்திரமாக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்து, அப்பொழுதே பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் மாபெரும் ஜாம்பவான்களான நாகேஷ், நம்பியார், விஜயகுமாரி, சுகுமாரி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சங்கீதா நடித்திருந்தார். துறுதுறுவென, சேட்டைக்கார பெண்ணாக நடித்த அவர் இப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்‌. ஆரம்பகாலத்தில் சங்கீதா தன்னை விட வயது மிகவும் அதிகமான ஹீரோக்களுடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Sangeetha

 இதையடுத்து சங்கீதா பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மகள் உள்ளார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சங்கீதாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.