சினிமா

முதலில் விஜய், அடுத்து யார்னு பார்த்தீர்களா!! புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட்! செம லக்குதான்...

Summary:

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் ம

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த வைகுந்தபுரமுலு என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் செம ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். பின்னர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திலேயே சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை


Advertisement